Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐபிஎல் ஊழல்- பவார், பிரபுல் படேல் மீது கை வைக்க காங். தயக்கம்

Subscribe to Oneindia Tamil

Pawar and Sonia Gandhi
டெல்லி: ஐபிஎல் விவகாரத்தில் சரத்பவார், பிரபுல் படேல் ஆகிய இரு முக்கிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பெயர்கள் வலுவாக அடிபட்டு வரும் நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளது.

இருப்பினும் தரூருக்கு ஒரு நியாயம், பவாருக்கு ஒரு நியாயமா என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், இந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதில் பெரும் குழப்பமடைந்துள்ளதாம் காங்கிரஸ் மேலிடம்.

நேற்று தன்னை வந்து சந்தித்த பிரணாப் முகர்ஜியிடம், பவார், படேல் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாராம் பிரதமர்.

அவரிடம், பிரபுல் படேல் மற்றும் அவரது மகள் பூர்ணா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள், அதற்கான ஆதாரங்கள் குறித்த தகவல்களை பிரதமரிடம், பிரணாப் அளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும், பவாரின் மருமகன் சதானந்தா சுலேவுக்கு சோனியின் மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் இருப்பது குறித்த விவரங்களையும் கேட்டு வாங்கியுள்ளாராம் பிரதமர்.

கையில் அனைத்து விவரங்களும் இருந்தாலும் கூட பவார் மீதோ, பிரபுல் படேல் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் காங்கிரஸ் உள்ளதாம்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் 9 எம்.பிக்கள் உள்ளனர். லோக்சபாவில் நிதி மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. இந்த நிலையில் படேல் மீதோ அல்லது பவார் மீதோ கை வைத்தால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காங்கிரஸ் ஒருமுறைக்கு பல முறை யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

அதேசமயம், அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டால் எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக சும்மா விடாது, குத்திக் குடைந்து விடும் என்ற கவலையும் காங்கிரஸை வாட்டி வருகிறது.

இந்தப் பிரச்சினையை சமாளிக் பிரபுல் படேலை மட்டும் காவு கொடுப்பது குறித்து பவாருடன் காங்கிரஸ் ஆலோசிக்கும் என்று தெரிகிறது. பவாரை விட படேல்தான் வசமாக மாட்டியுள்ளார் என்பதால் அவரை மட்டும் பலி கொடுத்து விட்டு பிரச்சினையை சமாளிக்க காங்கிரஸ் திட்டமிடுவதாக தெரிகிறது.

அதேசமயம், இந்த விவகாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சாதகமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக பல பிரச்சினைகளில் முறைத்துக் கொண்டு இருக்கிறார் பவார். ஆனால் இப்போது ஐபிஎல் விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் வசமாக சிக்கியுள்ளதால் இனி நம்மடம் வாலாட்ட மாட்டார், அமைதியாகி விடுவார் என காங்கிரஸ் தலைமை நிம்மதிப் பெருமூச்சு விடுகிறதாம்.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சினையால் காங்கிரஸுடனான உரசல் போக்கை இனி பவார் கைவிட்டு விடுவார். உறவுகளை உறுதியாக்கிக் கொள்ளவே விரும்புவார். எனவே இதனால் காங்கிரஸுக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் நல்லதாக அமையும் என்றார்.

இதற்கிடையே, ஐபிஎல் சர்ச்சை தொடர்பாக பிரபுல் படேல், பவார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை. இதற்காக எங்களது அமைச்சர்கள் பதவி விலக மாட்டார்கள் என்று தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திரிவேதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் ஏல விவகாரத்தில் எங்கள் கட்சிக்குத் தொடர்பு இல்லை. அமைச்சர் படேல், கொச்சி அணி ஏலம் தொடர்பான விவரங்களை ஐபிஎல் அலுவலகத்திலிருந்து பெற்று அதை சசி தரூருக்கு அனுப்பியதில் தவறேதுமில்லை.

அதுபோல் பவாரின் மகள் சுப்ரியா சுலேவின் கணவர் சதானந்த் சுலேவுக்கு சோனி தொலைக்காட்சி நிறுவனத்தில் பங்கு ஏதுமில்லை. ஆனால், ஐபிஎல் தொடங்கப்படுவதற்கு வெகு நாள்களுக்கு முன்பே சோனி நிறுவனத்துடன் சதானந்த் சுலேவுக்கு தொடர்பு உண்டு.

சசி தரூரை பின்பற்றி பவார், படேல் இருவரும் பதவி விலக வேண்டிய அவசியமில்லை.

ஐபிஎல் அணிகளின் ஏலத்தில் எங்கள் தலைவர்கள் முறைகேடு செய்ததாக ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என்று அவர் சவால் விடுத்தார்.

ஐபிஎல் விசாரணைக் குழு- சிதம்பரம் இடம் பெறவில்லை

இதற்கிடையே, சரத்பவார், பிரபுல் படேல் தொடர்பான ஐபிஎல் குழப்பம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ப.சிதம்பரத்தை விசாரணைக் குழுத் தலைவராக இருக்குமாறு பிரதமர் கேட்டுக் கொள்ளவில்லை என்று பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+