ஐபிஎல் அணிகள் குறித்த ஆவணங்கள் – வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்த பிசிசிஐ
மும்பை: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனின்படி, எட்டு ஐபிஎல் அணிகள் குறித்த அனைத்து முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.
எட்டு அணிகள் குறித்த அனைத்து ஆவணங்களும் வருமானவரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாம். வீரர்கள் ஏலம், ஒவ்வொரு அணியிலும் யார் யாருக்கு பங்கு உள்ளது. ஏல நடைமுறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் தகவல்களையும் ஒரிஜினல் ஆவணங்களோடு ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் அனுப்பிய சம்மனை ஏற்று அதில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்த ஆவணங்களையும் கிரிக்கெட் வாரியம் ஒப்படைத்துள்ளது என்றார்.
கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐபிஎல் தலைமை செயலதிகாரி சுந்தர் ராமன், ஐபிஎல் போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்தி வரும் இன்டர்நேஷனல் மேனேஜ்மென்ட் குரூப் சார்பில் சில அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து இந்த ஆவணங்களை அளித்தனர்.
இந்த சந்திப்பின்போது என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து இரு தரப்பும் தெரிவிக்கவில்லை.
ஏப்ரல் 16ம் தேதி கிரிக்கெட் வாரியத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்றைக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications