சென்னை விமான நிலையத்துக்கு வந்த துப்பாக்கிகள்-புரோக்கர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு சரக்கு மூலம் துப்பாக்கிகள், சைலன்சர்கள் அனுப்பப்பட்டது தொடர்பாக பாஸ்போர்ட் புரோக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலைய சரக்கு பிரிவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி துபாயில் இருந்து ஒரு பார்சல் வந்தது. அதில் துப்பாக்கிகள், சைலன்சர்கள் மற்றும் துப்பாக்கி உதிரி பாகங்கள் இருந்தன.
அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக விமான நிலைய சரக்குப் பிரிவு ஊழியர்கள் அயூப்கான், பழனீஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சீர்காழியைச் சேர்ந்த விஜயன் என்பவரது பாஸ்போர்ட் ஆவணம் இணைக்கப்பட்டு இந்த பார்சல் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து விஜயனும் கைது செய்யப்பட்டார்.
விஜயனிடம் விசாரித்தபோது தனது பாஸ்போர்ட்டை சில மாதங்களுக்கு முன் புரோக்கர் முகமது சேக் என்பவர் வாங்கிச் சென்றதாகக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக முகமது சேக்கை போலீசார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர் நேற்று தனிப்படையினரால் சென்னை பல்லாவரத்தில் கைது செய்யப்பட்டார்.
துபாயில் இருந்து இந்த ஆயுதங்கள் அனுப்பியது யார் என்று அவரிடம் விசாரணை நடக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications