இலங்கை: பெரீஸ் புதிய வெளியுறவு அமைச்சர் – 37 அமைச்சர்கள் பதவியேற்பு
கொழும்பு: இலங்கையில் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. புதிய வெளியுறவு அமைச்சராக ஜி.எல். பெரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையை ராஜபக்சே அறிவித்துள்ளார்.
இதில் 37 பேர் கேபினட் அமைச்சர்களாக இடம் பெற்றுள்ளனர். 39 பேர் துணை அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கேபினட் அமைச்சர்கள் அனைவரும் நேற்று ராஜபக்சேவால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
ராஜபக்சேவின் தம்பி பொருளாதார அமைச்சர்:
ராஜபக்சேவின் தம்பி பசில் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். பெரீஸ், புதிய வெளியுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான கோத்தபயா பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கிறார். அண்ணன் சமல் ராஜபக்சே சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரத்ஸ்ரீ விக்கிரமநாயகே பொது நிர்வாகம் மற்றும் சீரமைப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அமைச்சரவையில்,ராஜபக்சேவின் தீவிர விசுவாசிகளான டக்ளஸ் தேவானந்தா, கருணா, முத்துசிவலிங்கம் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications