ஈரோடு அருகே மத மாற்றம் செய்ய முயன்ற அரசு அதிகாரி சிறைபிடிப்பு !
ஈரோடு : ஈரோடு அருகே மதமாற்றம் செய்ய முயன்ற துணை தாசில்தார் உட்பட ஆறு பேரை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு பைபிள் மாணாக்கர்கள் அமைப்பு இயங்கி வருகின்றது.
இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், தனித்தனி குழுவாகப் பிரிந்து, ஈரோடு சூரியம்பாளையம் ஊராட்சி, சொட்டையம்பாளையம் பகுதியில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ரெவின்யூ காலனியில் வசிக்கும் கேசவன் வீட்டுக்கு நான்கு பேர் சென்று, அவரது வீட்டில் துண்டு பிரசுரத்தை கொடுத்து, அவர்களை கிறிஸ்துவ மத்திற்கு மாற வற்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
இந்த தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவ ஆசேவம் அடைந்த சிலர், மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் நிலஎடுப்புப் பிரிவு தனி துணை தாசில்தார் ஜான்சன், திருச்செங்கோடு தனியார் பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் (38), வீரப்பன்சத்திரத்தில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வரும் ஹென்றி மோகன்தாஸ் (65), மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பொக்கிஷம் (61), ஹெப்சிபா (45), அண்ணா பல்கலை தொலைதூரக் கல்வி மாணவி கவுசல்யா (28) ஆகியோரை சிறைப்பிடித்தனர்.
ஆனால் தாங்கள் மதம் மாறுமாறு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்த சித்தோடு இன்ஸ்பெக்டர் முத்துசாமி, எஸ்.ஐ. சரவணன் மற்றும் போலீசார், பொது மக்களிடம் இருந்து அவர்களை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications