என்னைப் பார்த்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பயப்படுவது ஏன்? – மோடி கேள்வி

தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விதம் குறித்து மோடி கூறுகையில், என்னை சஸ்பெண்ட் செய்து விட்டனர். என்னால் எப்படி ஆட்சிமன்றக் கூட்டத்தில் பங்கேற்க முடியும்.?
என்னைப் பார்க்க அவர்கள் பயப்படுகிறார்களா, உண்மையை சந்திக்க அஞ்சுகிறார்களா என்று தெரியவில்லை. ?
இதை எதிர்த்து கோர்ட்டுக்குப் போவேனா என்பது குறித்துக் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் மோடி.
தடைக்கற்களே நமது பாதை
முன்னதாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பின்னர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் பேசுகையில், உலக நாடுகள் பார்த்துப் பொறாமைப்படும்படியான ஒரு விளையாட்டு அமைப்பு இந்தியாவில் இருக்க வேண்டும் என நீண்ட காலமாக கனவு கண்டு வந்தேன். கிரிக்கெட்டால்தான் இதை சாதிக்க முடியும் என கருதினேன். உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப் போடும்படியான அமைப்பை உருவாக்க உறுதியுடன் இருந்தேன்.
இன்று 3வது ஐபிஎல் தொடரை முடித்து விட்டு நிற்கும் இந்தத் தருணத்தில் அதை சாதித்து விட்ட மகிழ்ச்சியுடன் நிற்கிறேன். மைதானத்தில் இந்தப் போட்டியை வெற்றிகரமாக முடித்திருந்தாலும், மைதானத்திற்கு வெளியே நடந்த பல கசப்பான நிகழ்வுகள் அனைவரையம் உடைய வைத்துள்ளது. எல்லாம அரை குறையான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை. உள்நோக்கம் கொண்டவை.
ஆட்சிமன்றக் குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும், பொதுக்குழுவில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பின்னர் எடுக்கப்பட்டவையே என்று இந்த நேரத்தில தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
ஐபிஎல்லின் தலைவர் என்ற முறையில், இதில எங்காவது விதி மீறல், முறைகேடுகள் நடந்திருக்குமானால், அதற்கு நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். ஐபிஎல் மிகவும் நேர்மையானது, ஒளிவுமறைவற்றது. உஙகளது ஆதரவு, ஆசிர்வாத்த்துடன் இது சாத்தியமானது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு அமைப்பாக இது உருவெடுத்துள்ளது. இது வீணாகி, நீர்த்துப் போக யாரும அனுமதித்து விடக் கூடாது. இது மேலும் மேலும் பலமாக வேண்டும்.
இந்த சீசனில் ஐபிஎல் பல தடைகளை சந்தித்தது. ஆனால் அதை நாம் வெற்றிகரமாக சந்தித்து தாண்டி வந்து விட்டோம். தடைக்கற்களே நமது பாதை என்று ஜென் பழமொழி உள்ளது என்றார் மோடி.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications