அமிதாப் வீடு முற்றுகை... நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த நாம் தமிழர் இயக்கம்!
மும்பை: கொழும்பில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் அமிதாப்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் அவரது வீட்டை நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜுன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார். இவரது மகன், மருமகள் ஆகியோரும் இந்த அமைப்பில் உள்ளனர்.
இதற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
ஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்சே அரசாங்கம் தலைநகர் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளை கைவிட்டு, சக இந்தியரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் மும்பை ஜுஹூவில் உள்ள நடிகர் அமிதாப்பச்சனின் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
அப்போது இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது, அந்த நிகழ்ச்சிக்கான விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
அமிதாப்புடன் சந்திப்பு!
போராட்டத்தின் போது அமிதாப்பச்சன் வீட்டில் இருந்தார். போராட்டம் நடந்து முடிந்த பிறகு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் அமிதாப்பச்சனை சந்தித்து தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை கேட்டுக் கொண்ட அமிதாப், இது பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்.
நாம் தமிழர் அமைப்பின் போராட்டம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக இன்று போராட்டம் நடப்பதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும் நேற்றே போராட்டம் நடந்து விட்டது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications