நித்யாவின் அன்னிய செலாவணி மோசடி-லெனின் சாட்சியம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 'குஜால்' சாமியார் நித்யானந்தா மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது.

நித்யானந்தா மீது பாலியல் விவகாரம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்துள்ள கர்நாடக சிஐடி போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில்நித்யானந்தாவின் பிடுதி ஆசிரமத்தில் கடந்த வாரம் போலீஸார் பறிமுதல் செய்த கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் ஹைதராபாதில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது தியான பீட கிளை மூலம் பக்தர்களிடம் பல கோடி ரூபாய் நிதி வசூலித்து பெரும் அந்நியச் செலாவணி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அந்நியச் செலாவணி இயக்குனரகத்துக்கு கர்நாடக சிஐடி போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நித்யானந்தா மீது அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளது.

வெளிநாட்டில் டாலர்களில் பணம் பெறும்போது அதை அன்னிய செலாவணி இயக்குனரகத்துக்கு துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதியை நித்யானந்தா பின்பற்றவில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸ் வங்கியில் இந்தப் பணத்தைப் போட்டு அதை ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் நித்யானந்தா இந்தியாவில் உள்ள தனது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இதுபோல வேறு நாடுகளிலும் நித்யானந்தா மோசடி செய்துள்ளாரா என்ற விசாரணையும் நடக்கவுள்ளது.

புலி, மான் தோலால் புது பிரச்சனை:

இந் நிலையில் அவர் புலி, மான் தோல்களை பயன்படுத்தியது தொடர்பாக கர்நாடக வனத்துறையும் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

லெனின் கருப்பன் சாட்சி அளித்தார்:

இதற்கிடையே நித்யானந்தாவுன் ரஞ்சிதா உல்லாசமாக இருந்த சி.டியை வெளியிட்ட லெனின் கருப்பன் இன்று பெங்களூர் சிஐடி அலுவலகத்தில் நேரில் சாட்சியம் அளித்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்:

இதற்கிடையே கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அவரை ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

அவரிடம் விசாரணை முழுமையாக முடியாததால் மேலும் 14 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் கோரவுள்ளனர்.

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்காத நித்யானந்தா இப்போது ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்துள்ளதாக சிஐடி எஸ்.பி. யோகப்பா தெரிவித்தார்.

ஆனால், அவர் சரியாக உணவு உட்கொள்ள மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தவிர நடிகை ரஞ்சிதாவையும் நித்யானந்தாவுக்கு எதிராக போலீஸ் புகார் அளித்த லெனின் கருப்பனையும் விசாரிக்கவும் சிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+