சிதம்பரம் நடராஜர் கோவிலில் சசிகலா சிறப்பு பூஜை
சிதம்பரம்: சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோவிலுக்குச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் ஜெயல்லிதாவின் தோழி சசிகலா நேற்று பரிகார பூஜையை நடத்தினார்.
நடராஜர் கோவிலுக்கு வந்த சசிகலா, சித்சபையில் ஏறி நடராஜரை வழிபட்டார். நடராஜர் கோவில் வளாகத்திலேயே உள்ள கோவிந்தராஜ பெருமாள், தாயார் சன்னிதி, சரபேஸ்வரர், ஆதிமூலநாதர், சிவகாமியம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று வழிபட்டார். அங்கு சசிகலா பெயரில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
21 பேருக்கு எலுமிச்சை, புளியோதரை சாதங்களும், தேங்காய், வாழைப்பழம் அடங்கிய பிரசாதங்களும் வழங்கினார். கோவிலில் பூஜைகள் செய்த தீட்சிதர்களுக்கு 1,000, 500 ரூபாய் என நோட்டுகளை வாரி வழங்கினார். சுமார் 2 மணி நேரம் நடராஜர் கோவிலில் இருந்த சசிகலா, பகல் 12 மணிக்கு தில்லை காளி கோவிலுக்கு வந்தார். அங்கு சுவாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சசிகலா பெயரில் சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனையும் நடந்தது.
தில்லையம்மனுக்கும் அபிஷேக ஆராதனையும்,சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. 12.30 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்னை சென்றார்.












Click it and Unblock the Notifications