ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நான் உரிமையாளர் அல்ல- ஷில்பா ஷெட்டி

வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது அமலாக்கப் பிரிவினரின் தீவிர கண்காணிப்பில் வந்துள்ளது.
குறிப்பாக ஷில்பா ஷெட்டியை தங்களது கிடுக்கிப் பிடியில் கொண்டு வந்துள்ளனர் அமலாக்கப் பிரிவினர். மேலும் ஷில்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பினாமி என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் கூறுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐபிஎல் பதிவேட்டில் ஷில்பாவின் பெயரோ அல்லது அவரது கணவர் ராஜ்குந்த்ராவின் பெயரோ இல்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ஷில்பா ட்விட்டர் செய்தி மூலம் விளக்குகையில், நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் அல்ல. அது என்னுடையதும் இல்லை.
எனக்கு அதில் எந்தப் பங்கும் இல்லை. நான் அந்த அணியின் பிராண்ட் அம்பாசடர் மட்டுமே. அதேசமயம், எனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அதில் பங்கு உள்ளது என்று கூறியுள்ளார் ஷில்பா.
ராஜஸ்தான் அணியின் பினாமி உரிமையாளர் ஷில்பா என்று ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதே அணிக்கு லலித் மோடியின் நெருங்கிய உறவினரும் முக்கிய பங்குதாரராக உள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் லலித்மோடியின் நெருங்கிய உறவினர் இருவருமே அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜெய்ப்பூர் ஐ.பி.எல். பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இது, மொரீஷியஸ் நாட்டில் செயல்பட்டு வரும் இ எம் ஸ்போர்ட்டிங் ஹோல்டிங் என்ற நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த மொரீஷியஸ் நிறுவனத்தில், லலித்மோடியின் மைத்துனர் சுரேஷ் செல்லாராம் என்பவருக்கு இங்கிலாந்தின் வர்ஜின் தீவு நிறுவனத்தின் மூலமாக 44.15 சதவீத பங்குகள் உள்ளன. மோடிக்கு நெருக்கமான இங்கிலாந்தில் உள்ள மனோஜ் படாலேவுக்கு 32.4 சதவீத பங்குகள் உள்ளன.
பிரபல டி.வி. அதிபர் ராபர்ட் முர்டோக்கின் மகனுக்கு 11.7 சதவீத பங்குகளும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் வழி உறவினர்களுக்கு 11.7 சதவீத பங்குகளும் இருப்பது வருமானவரி சோதனையில் தெரிய வந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications