ஏமனில் தற்கொலை தாக்குதல்-உயிர் தப்பிய யு.கே தூதர்

Subscribe to Oneindia Tamil

சனா: ஏமன் நாட்டில் அல்-கொய்தா தீவிரவாதி நடத்திய பயங்கர தற்கொலைத் தாக்குதலில் அந்த நாட்டுக்கான இங்கிலாந்து தூதர் உயிர் தப்பினார்.

இங்கிலாந்து டிம் டோர்லோட் ஏமன் தலைநர் சனாவில் பாதுகாப்பு நிறைந்த பிரிட்டிஷ் தூதரகம் நோக்கி காரில் சென்றபோது ஒரு தீவிரவாதி உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியபடி காரின் மீது பாய்ந்தான்.

இதில் குண்டுகள் வெடித்துச் சிதறி தீவிரவாதி பலியானான். டோர்லோட் சென்ற கார் லேசான சேதத்துடன் தப்பிவிட்டது. இதனால் அவர் உயிர் தப்பினார்.

அருகே இருந்த 2 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து தூதரகத்தை தற்காலிகமாக மூடுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்தது.

மேலும் ஏமனில் உள்ள இங்கிலாந்து நாட்டினர் அதிகம் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் விழிப்புடன் இருக்குமாறும் இங்கிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+