திருமணத்திற்கு வீட்டில் மறுப்பு – அத்தைமகனுடன் விஷம் குடித்த பெண் சாவு
சென்னை: 18 வயதான பிறகு திருமணம் செய்து வைப்பதாக வீட்டில் தொடர்ந்து கூறி வந்ததால், மனம் உடைந்த பெண், தனது அத்தை மகனுடன் விஷம் குடித்தார். இதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அத்தை மகன் உயிருக்குப் போராடி வருகிறார்.
சென்னை பட்டாபிராம் காந்தி ரோட்டை சேர்ந்தவர் ஜானகிராமன், இவரது மகள் மணிமேகலை (17). திருவொற்றியூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்தார்.
கும்மிடிப்பூன்டி அருகே உள்ள கவரப்பேட்டை ஜெ.எஸ். நகரை சேர்ந்தவர் குகன் (23). எண்ணூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவர் மணிமேகலைக்கு அத்தை மகன். 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இதனால் அடிக்கடி மாமனார் ஜானகிராமனிடம், மணிமேகலையை திருமணம் செய்து தரும்படி கேட்டார். அவரும் மகளுக்கு 18 வயது வந்ததும் உனது அப்பாவை அழைத்துவா பேசி முடிக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
ஆனால் இந்த பேச்சு குகனுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜானகிராமன் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அப்போதும் இது போல பதில் கூறியதாக தெரிகிறது.
மனமுடைந்த குகன், மணிமேகலையை அழைத்து பேசி, திருமணத்திற்கு சம்மதம் தரவில்லை. வாழ்க்கையில் ஒன்றாக இணைய விடமாட்டார்கள். ஆகையால் சாவிலாவது ஒன்றாக இணைவோம் என தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து 21-ந்தேதி மணிமேகலை வேலை செய்யும் நிறுவனத்திற்கு குகன் சென்று கோவிலுக்கு போகிறோம் எனக்கூறி அவரை அழைத்து வந்தார். பின்னர் 2 பேரும் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் வைத்து விஷம் குடித்து தண்டவாளத்தில் படுத்தனர்.
இதனை பார்த்த ரயில் பயணிகள் அவர்களை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை மணிமேகலை பரிதாபமாக இறந்தார்.
குகன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு போராடி வரும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications