பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்
மதுரை: பச்சைப் பட்டுடுத்தி ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்கி அருள் பாலித்தார் கள்ளழகர். லட்சக்கணக்கான பக்தர்கள் இதைக்கண்டு கோவிந்தா கோஷம் முழங்கி அழகரை வழிபட்டனர்.
தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண வரும் அழகர் பெருமான், தான் வருவதற்குள் திருமணம் முடிந்து விடுவதால் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிச் சென்று விடுவதாக ஐதீகம்.
அதன்படி நேற்று மதுரைக்கு வந்த கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குழுமி இருக்க இன்று அதிகாலை தங்கக் குதிரை வாகனத்தில் அழகர் பெருமான் புறப்பட்டார். கருப்பண்ணசாமி கோவிலில் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் வைகை ஆற்றுக்கு வந்தார் அழகர். காலை 7.05 மணியளவில் வைகை ஆற்றில் அழகர் இறங்கினார்.
பச்சைப் பட்டுடுத்தி இன்று அழகர் ஆற்றில் இறங்கினார். பச்சைப் பட்டு உடுத்தியிருந்ததால், இந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழித்தோங்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆற்றில் இறங்கிய அழகர் பெருமான் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கோவிந்தா கோஷமிட்டும் பக்தர்கள் அழகரை வழிபட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications