சிவகிரியில் போலீசை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
சிவகிரி: சிவகிரியில் பொது வேலை நிறுத்தத்தின் போது கம்யூ கட்சியினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து அதிமுக கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து அதிமுக கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெல்லை மாவட்டத்தில் நேற்று சிவகிரி, புளியங்குடி, சங்கரன்கோவில், மேலப்பாளையம், களக்காடு, வள்ளியூர், நெல்லை ஜங்ஷன் உள்பட பல இடங்களில் முழு வேலை நிறுத்தம் நடைபெற்றது. பஸ்கள் இயக்கப்பட்ட போதும் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணம் செய்தனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
சிவகிரியில் சிபிஎம் அலுவலகம் நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்த அக்கட்சியினரை போலீசார் மறித்து 4 பேர்களுக்கு மேலாக செல்லகூடாது என கூறி கைது செய்து வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது பெருமாள், குருசாமி ஆகியோரை தாக்கியுள்ளனர்.
தட்டிக் கேட்ட போலீஸ் வேனில் இருந்த இந்திய கம்யூ செயலாளர் தங்கவேலு, மாவட்ட குழு உறுப்பினர்கள் குருசாமி, இளைஞர் மன்ற தாலுகா செயலாளர் முத்துசாமி ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.
சிவகிரி போலீசாரின் இந்த செயலை அனைத்து கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசாரை கண்டித்து இன்று 28ம் தேதி மாலை சிவகிரியில் கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறதுஎன்று தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications