தமிழக, கேரள ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற சக வீரர்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமி்ல் தமிழர் உள்பட இரு சக வீரர்களை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார்.
இந்த மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டம் கென்ஜங் என்ற இடத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ மையத்தில் நேற்றிரவு 10.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் அம்பாடி என்ற வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த முத்து (30) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த தானப்பன் (31) ஆகிய இருவரும் உடலில் குண்டுகள் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியாயினர்.
இதையடுத்து தப்பியோடிய அம்பாடியை ராணுவ வீரர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் காட்டுப் பகுதியில் வைத்து வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலியான வீரர்களின் உடல்கள் இன்று அவரவர் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மணிப்பூரில் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவம் உள்ளிட்ட மத்தியப் படைகள் ஏராளமான அளவில் நிலை நிறுத்தப்ப்டடுள்ளன. கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தப் படைப் பிரிவுகளில் வீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் பலர் பலியாகியுள்ளனர்.
இந்த மாநிலத்தில் இதுவரை 7 முறை வீரரே சக வீரர்களை சுட்டுக் கொன்றுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications