ரூ.700க்கு மொபைல் போன் தரும் வோடஃபோன்!

இந்திய சந்தைகளில் ஏற்கெனவே மலிவு விலையில் செல்போன்களை வழங்கி வருகின்றன நோக்கியா, மைக்ரோமேக்ஸ், ஃப்ளை மற்றும் ரே போன்ற நிறுவனங்கள். செல்போன் சேவை நிறுவனங்களில் ரிலையன்ஸும் டாடாவும் வழங்கின.
வோடஃபோன் நிறுவனமும் ஏற்கெனவே ரூ.1.200 க்கு ஹேண்ட்செட் வழங்கி வந்தது.
இப்போது அதைவிட மலிவாக ரூ.700க்கு புதிய ஹேண்ட் செட்களை அறிமுகப்படுத்துகிறது.. அதாவது 16 டாலர்களுக்கு.
இந்தியா மட்டுமல்லாமல், செல்போன் துறையில் வளரும் சந்தைகளைக் கொண்ட எகிப்து, துருக்கி மற்றும் ஆப்ரிக்க நாடுகளிலும் இதே 16 டாலருக்கு செல்போன்களை விற்க முடிவு செய்துள்ளது வோடஃபோன்.
இதுகுறித்து வோடஃபோன் எஸ்ஸார் சிஇஓ மார்டின் பீட்டர்ஸ் கூறுகையில், "இந்தியாவில் கிராமப் புறங்களில் மொபைல் ஹேண்ட்செட்டுக்காக அதிகம் செலவழிக்க முடியாத நிலைதான் இன்றும் உள்ளது. அவர்களைக் குறிவைத்துதான் இந்த மலிவு விலை போன்களை இறக்குகிறோம். அதே நேரம் நகர்ப்புறங்களிலும் தாராளமாகக் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications