பெண்ணை கொலை-தோடுகளுக்காக காதுகள் அறுப்பு
சென்னை: சென்னையில் சலவைத் தொழிலாளி பெண்ணை கொலை செய்த நபர் அவர் அணிந்திருந்த தோடுகளுக்காக காதுகளை அறுத்துச் சென்றார்.
சேத்துப்பட்டு போலீஸ் நிலையம் உள்ள சலவை கூடத்தில் 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து சலவை தொழில் செய்து வருகின்றனர்.
இங்கு கணவரை இழந்த சுப்பம்மாள் (65) என்ற பெண்ணும் தனியாக தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
சுப்பம்மாளிடம் சங்கரன்கோவிலை சேர்ந்த மாடசாமி (45) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக சலவை வேலை பார்த்து வந்தார். மாடசாமிக்கு தினமும் 300 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார் சுப்பம்மாள்.
இந் நிலையில் நேற்றிரவு நன்றாக குடித்துவிட்டு வந்ச மாடசாமி, சுப்பம்மாளின் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சுப்பம்மாளை கழுத்தை இறுக்கி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த 1.5 பவுன் செயினை பறித்த மாடசாமி, காதில் இருந்த 1 பவுன் கம்மலை கழற்ற முயன்றார்.
ஆனால் முடியாமல் போனதால் 2 காதுகளையும் வெட்டி எடுத்துக் கொண்டு தப்பினார்.
இந்தக் கொலை சம்பவம் இன்று காலை தான் மற்றவர்களுக்குத் தெரியவந்தது. கொலையாளி மாடசாமியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications