காங்கிரசில் இணைகிறார் நடிகை குஷ்பு!

சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்ததால் அவர் அதிமுகவில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந் நிலையில் அவர் காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கணவர் சுந்தர் மற்றும் குடும்பத்தினருடன் லண்டனில் ஓய்வெடுத்து வரும் குஷ்பு ஓரிரு நாட்களில் சென்னை திரும்புகிறார்.
அதன் பிறகு அரசியலில் ஈடுபடும் முடிவை அறிவிப்பார் என்று தெரிகிறது.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குஷ்பு காங்கிரசில் சேர விரும்பினால் நாங்கள் வரவேற்போம் என்று கூறியுள்ளார்.
வருஷம் 16 படம் மூலம் தமிழில் அறிமுகமான குஷ்பு தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தமிழகத்தில் கோவில் கட்டிய ரசிகர்கள் எல்லாம் உண்டு.
சினிமா வாய்ப்புகள் சுத்தமாகக் குறைந்தவுடன் டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் குஷ்பு ஒரு காலத்தில் நடிகர் பிரபுவுடன் மிக நெருக்கமாக இருந்தவர். எதையும் வெளிப்படையாக பேசிவிடக் கூடியவர்.
சில ஆண்டுகளுக்கு முன் கற்பு குறி்த்து அவர் பேசிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போராட்டங்கள் நடத்தின. கோவில் கட்டிய அதே தமிழகத்தில் குஷ்புவுக்கு செருப்புகளும், துடைப்பங்களும் காட்டப்பட்டன.
தமிழகமெங்கும் நீதிமன்றங்கள் 22 வழக்குகள் தொடரப்பட்டன. இரு தினங்களுக்கு முன்னர் தான் அவரை அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவித்தது உச்ச நீதிமன்றம்.
இந் நிலையில் குஷ்புவின் கவனம் அரசியல் பக்கம் திரும்பியிருக்கிறது.
ராகுல் காந்தி சென்னை வருகை:
இந் நிலையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாமை நேரில் பார்வையிட அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அடுத்த மாதம் சென்னை வருகிறார்.
அப்போது அவர் முன்னிலையில் குஷ்பு காங்கிரசில் சேரலாம் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications