சாத்தூரில் பிரபல ரவுடி என்கெளன்டரில் சுட்டுக்கொலை- மனைவி தற்கொலை
சாத்தூரில் தலைமை காவலர் நாகரத்தினம் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளி குமார் என்பவரை போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
குமார் ஒரு பிரபல ரவுடி ஆவார். சாத்தூர்- கோவில்பட்டி சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் கருவேலங்காட்டில் பதுங்கி இருந்த குமாரைப் பிடிக்க தனிப்படை போலீசார் சென்றபோது, போலீசாரை குமார் தாக்க முயன்றுள்ளார். அப்போது அவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தகவலை அறிந்ததும் குமாரின் மனைவி சோலையம்மாள் விஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
சோலையம்மாள் - குமார் தம்பதியருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குமார் கொல்லப்பட்டதும், அவரது மனைவி ஒரு வயது குழந்தையை தவிக்க விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் கண்ணீர்ப் பேட்டி
தற்கொலை செய்து கொண்ட சோலையம்மாளின் அண்ணன் முத்துப் பாண்டி கூறுகையில், வீட்டில் சண்டை என்று கூறி எனது தங்கை வீட்டிற்கு வந்தார். அவரிடம் எனது தாயார் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் நான் வீட்டுக்கு வந்தேன்.
பின்னர் அறைக்குள் போனார் சோலையம்மாள். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தோம். அப்போது எனது தங்கை மயங்கிக் கிடந்தார். அவர் விஷம் குடித்திருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினோம். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார் என்றார் கண்ணீருடன்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications