சிறுமிக்கு கண் சிகிச்சை-ஸ்டாலினுக்கு எம்ஏல்ஏக்கள் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தவறான மருந்து, சிகிச்சையால் கண் பார்வை இழந்த மாணவி சுரேகாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உடனடி நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சட்டசபையில் எம்எல்ஏக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து பாமக எம்.எல்.ஏ. வேல்முருகன் கூறுகையில், பார்வை பாதிக்கப்பட்ட சிறுமி சுரேகாவுக்கு மேற்சிகிச்சைக்காக ஆகும் செலவு அனைத்தையும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொள்வதாக செய்தி வந்துள்ளது.
சொந்த செலவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அவருக்கு மனமார்ந்த நன்றிகள் என்றார்.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் எம்எல்ஏ ரவிகுமார் பேசுகையில், கண்பார்வை பறிபோன சென்னை சிறுமிக்கு கண்பார்வை திரும்ப நடவடிக்கை எடுத்த துணை முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.












Click it and Unblock the Notifications