எம்.இ, எம்.டெக் நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் ரூ.5,000 உயர்வு
சென்னை: சுயநிதி கல்லூரிகளில் எம்.இ, எம்.டெக், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் கீழ் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ரூ.5,000 வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தில் தனியார் சுயநிதி கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.ஆர்க் ஆகிய 5 முதுகலை பட்டப் படிப்புகளுக்கு நிர்வாக ஒதுக்கீட்டு கல்வி கட்டணத்தை மாற்றுவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தாண்டு இந்தப் படிப்புகளுக்கு ரூ. 5000 கூடுதலாக கட்டணம் வசூல் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
வரும் மே 11ம் தேதி நடக்கும் இந்தக் குழுவின் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு முறையாக பரிந்துரைக்கப்படவுள்ளது.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதுகலைப் பட்டப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு கல்வி கட்டணம் ரூ.25,000 ஆகும்.
ஆனால், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எம்.பி.ஏ. படிப்பிற்கு ரூ. 1 லட்சமும், எம்.சி.ஏ. படிப்புக்கு ரூ.80,000மும், எம்.இ படிப்புக்கு ரூ.60,000மும், எம்.டெக் படிப்புக்கு ரூ.1.4 லட்சமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தக் கட்டணங்களை ரூ. 5,000 வரை உயர்த்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் குழு பரிந்துரைக்கவுள்ளதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications