ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு-மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை மீது இது குறித்து பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தற்போது நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் இந்தப் பணிகள் தொடங்கியுளன. இதில், மக்கள் தொகையை மட்டுமே கணக்கிடுகின்றனர். ஆனால், ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் உள்ளனர் என்று கணக்கெடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பில் 69 சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கு வேண்டும். அந்த கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துமாறு, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கும் மனு அனுப்பினோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

எனவே, இது குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர், இயக்குனர் மற்றும் மாநில அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+