உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எலிப்பே தர்மாராவ் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) எலிப்பே தர்மாராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த எச்.எல்.கோகலே, உச்சநீதிமன்ற நீதிபதியா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு பிரிவுபசாரம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எலிப்பே தர்மாராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி எலிப் தர்மாராவ், 1978 ல் வழக்கறிஞராக தன் பணியைத் தொடங்கினார். ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக 1999 ல் நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2006 ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications