பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயார்: மத்திய-மாநில அரசு வழக்கறிஞர்கள்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரை விமான நிலையத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கருப்பன் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்தனர்.
அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில்தான் பார்வதியம்மாள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து கடந்த 2003ம் ஆண்டு மத்திய அரசு எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் அனுப்பியது.
அந்த அடிப்படையிலே சென்னை வந்த பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறியிருக்கின்றன. இதுகுறித்து தமிழக அரசின் தற்போதைய நிலை என்ன என்பதை அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும் என்றும், விசாரணை இன்று தொடர்ந்து நடைபெறும் என்றும் உத்தரவிட்டனர்.
திருப்பி அனுப்ப உரிமை உண்டு-மத்திய அரசு:
முன்னதாக, மத்திய அரசு சார்பில் குடியேற்ற அதிகாரி அவி பிரகாஷ் நேற்று ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,
மனுதாரருக்கு இந்த மனுவை தாக்கல் செய்ய தகுதியில்லை. அவர் பார்வதியம்மாளின் உறவினர் இல்லை. அவருக்கு வேறு எந்தவிதத்திலும் தொடர்பும் கிடையாது. பார்வதியம்மாளை திருப்பி அனுப்பியதில் குடியேற்ற அதிகாரிகள் சட்டப்படிதான் நடந்துள்ளனர். பார்வதியம்மாள் இந்திய பிரஜை என்பது உறுதி செய்யப்படவில்லை. எந்த வெளிநாட்டவரையும் திருப்பி அனுப்பும் உரிமை குடியேற்ற அதிகாரிகளுக்கு உண்டு.
தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலே கடந்த 2003ம் ஆண்டு பார்வதியம்மாளுக்கு எதிராக எச்சரிக்கை சுற்றறிக்கையை அனைத்து இந்திய தூதரகங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியது. அதன்படி பார்த்தால் கோலாலம்பூரில் உள்ள தூதகரம் பார்வதியம்மாளுக்கு விசா வழங்கியிருக்கக் கூடாது.
வெளிநாட்டவராக இருப்பதால் அவருக்கு இந்தியாவில் அடிப்படை உரிமை எதுவும் இல்லை. எனவே, அவரை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் குடியேற்ற அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை குறைகூற முடியாது என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் இந்த மனு மீது இன்றும் விசாரணை நடந்தது.
அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா கூறுகையில், பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயார் என்றார்.
அதே போல மத்திய அரசி்ன் வழக்கறிஞர் ரவீந்திரன் கூறுகையில், தமிழக அரசு கேட்டுக் கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது என்றார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications