தமிழக சட்ட மேலவை: மக்களவையில் தீர்மானம் தாக்கல்
டெல்லி: தமிழகத்தில் சட்ட மேலவை கொண்டு வருவது குறித்த தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் சட்ட மேலவையை விரைவில் கொண்டு வர முதல்வர் கருணாநிதி தீவிரம் காட்டி வருகிறார்.
இதையடுத்து அது தொடர்பாக சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், திமுகவைச் சேர்ந்த 99 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியின் 36 எம்எல்ஏக்கள், பாமகவின் 18 எஎஎல்ஏக்கள், விடுதலைச் சிறுத்தைகளின் 2 எம்எல்ஏக்கள் என155 உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக, மதிமுக, இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 61 பேர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர்.
இதையடுத்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதே நாளில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இன்று அது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தவுடன் மேலவையை அமைப்பதற்கான நடவடிக்கைகை தமிழக அரசு உடனே தொடங்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications