ஆவின் தரும் 'புரோபயோடிக் லஸ்ஸி'!

Subscribe to Oneindia Tamil

Aavin
சென்னை: ஜீரண சக்தியை மேம்படுத்தும் புதிய லஸ்ஸியை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசின் ஆவின் நிறுவனம்.

புரோபயாடிக் லஸ்ஸி என்று பெயரிடப்பட்டுள்ள இதன் விற்பனையை துணை முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நுகர்வோர்களின் தேவையின் அடிப்படையில், மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப புதிய பால் பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவரும் ஆவின், புதிய பால்பொருளான 'புரோபயோடிக் லஸ்ஸி'யை தயாரித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'புரோபயோடிக் லஸ்ஸி'யை அறிமுகப்படுத்தினார். அதனை பால் வளத்துறை அமைச்சர் மதிவாணனும், தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியும் பெற்றுக்கொண்டனர்.

புரோபயோடிக் நுண்ணுயிர்கள், மனித உடல் சார்ந்துள்ளதால் இந்த லஸ்ஸி அனைத்து வயதினருக்கும், முக்கியமாக ஜீரண மண்டல நோய்கள் உள்ளவர்களுக்கும் ஏற்றதாகும். புரோபயோடிக் லஸ்ஸி உடல் நலத்துக்கு உகந்தது. சுலபமாக ஜீரணிக்கக்கூடியது, உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது, குடல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது, சீதபேதி என்ற வயிறு சம்பந்தமான நோயைக் கட்டுப்படுத்துகிறது.

தற்போது அறிமுகப்படுத்தியுள்ள ஆவின் புரோபயோடிக் லஸ்ஸியில் ஒவ்வொரு 100 கிராமிலும் 121 கிலோ கலோரியும், 1.2 கிராம் கொழுப்புச்சத்தும், 3.9 கிராம் புரதச்சத்தும், 0.8 கிராம் தாதுச்சத்தும், 5.8 கிராம் மாவுச்சத்தும், 16.5 கிராம் சர்க்கரைச் சத்தும் உள்ளது. ஆவின் புரோபயோடிக் லஸ்ஸி 200 கிராம் கப்பின் விலை ரூ.15.00 மட்டுமே.

மேலும் இந்த நிகழ்ச்சியில், ஆவின் நிறுவனத்தில் தற்பொழுது செயல் அலுவலர்களாக பணிபுரியும் 29 பேர்களுக்கு துணை மேலாளர்களாக பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார் துணை முதல்வர்.

இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் சி.முத்துக்குமாரசாமி, பால்வளத்துறை ஆணையர்-ஆவின் நிர்வாக இயக்குநர் அபூர்வவர்மா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+