காங் ஆதரவு இல்லாமல் திராவிட கட்சிகள் வெல்ல முடியாது-கார்த்தி
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் எந்த திராவிடக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் கூறினார்.
அகில இந்திய பார் கவுன்சில் துணை தலைவராக பதவியேற்றுள்ள வழக்கறிஞர் தனபால்ராஜுக்கு பாராட்டு விழா நடந்தது.
அதில் வழக்கறிஞரும், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி பேசுகையி்ல்,
எனது தந்தைக்கு உண்மையான தொண்டனாக இருப்பவர் தனபால்ராஜ். என் தந்தை என்ன முடிவு எடுத்தாலும் அவருக்கு துணை நின்றவர்.
காங்கிரஸ் நண்பர்கள் நம்முடைய சொந்த செல்வாக்கில் ஜெயிக்க வேண்டும். அதற்கேற்ப உழைக்க வேண்டும். மாறாக தேர்தலில் நல்ல கூட்டணி அமையும், அப்போது அடிக்கும் அலையில் நாம் ஜெயித்து விடலாம் என்று இருக்க கூடாது.
திராவிடக் கட்சிகளில் எந்த கட்சியும் காங்கிரசுடன் கூட்டணி அமைக்காமல் அதிகாரத்துக்கு வர முடியாது.
திரைப்படத்தில் கெட்டவன் என்றால் அரசியல்வாதியையோ, போலீஸ்காரரையோ காட்டுகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் இந்த நிலை மாறி வழக்கறிஞர்களை காட்டுவார்கள் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு நிலைமை உள்ளது.
உலகம் முழுவதும் புகழ் பெற்ற அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் தான். ஆனால் தமிழகத்தில் மரியாதை தேய்ந்து விட்டது. அதற்குக் காரணம் நாம் நடுநிலையாக இல்லாதது தான்.
கடந்த ஆண்டு எத்தனை நாள் வேலை நிறுத்தம் நடந்தது. உங்கள் லட்சியம் உயர்ந்தது தான், நான் அதை மதிக்கிறேன். ஆனால், அந்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டது தொழிலதிபர்கள் அல்ல, சாதாரண மக்கள் தான் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications