சிஆர்பிஎப் வீரர் மர்ம சாவு- கடையநல்லுரில் சாலைமறியல்
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் கிளப்புவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் வடகாசியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஆதிசங்கரன். இவர் சட்டீஸ்கர் மாநிலம் பிலாய் என்ற நகரத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார்.
4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிலாயில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு இறந்ததாக குமந்தாபுரத்திற்கு பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அவர் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து குமந்தாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. சிறு சிறு காயங்கள் உடலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் ஆதிசங்கரன் சாவில் மர்மம் இருப்பதாக அறிந்து ஆவேசமடைந்தனர்.
இதையடுத்து செங்கோட்டை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின் அவர்கள் உடலை வாங்கினர். இதுகுறித்து அப்பகுதியினர் ஆதிசங்கரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் உண்மைகளை மறைப்பதாகவும் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications