இன்று முதல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம்
சென்னை: இன்று முதல் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப் படிவங்கள் விநியோகம் தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்ப படிவங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவருகிற 29ம் தேதி வரைநடைபெறும். விண்ணப்ப் படிவங்களை நிரப்பி கொடுக்க கடைசி நாள் மே 31ம் தேதியாகும்.
ஜுன் 18-ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. 28-ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது. ஜுலை மாதம் 25-ந் தேதி கவுன்சலிங் முடிகிறது.
இன்று முதல் 29-ந் தேதி வரையில் (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர) தினசரி காலை 9.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.
ஒரு விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.500 (எஸ்.சி.,எஸ்.டி.பிரிவினருக்கு ரூ.250) ஆகும். ரொக்கமாகவோ, வங்கி டிமாண்ட் டிராப்ட் (டி/டி) ஆகவோ செலுத்தலாம்.
சென்னையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி.வளாகம், புரசைவாக்கத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக், பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி ஆகிய மையங்களிலும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வாங்கலாம்.
தமிழகத்தில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 1 லட்சத்து 65 ஆயிரம் மாணவர் இடங்கள் உள்ளன. கல்லூரிகள் பெருமளவில் இருப்பதால் விண்ணப்பித்த அனைவருக்குமே இடம் கிடைக்கும். கடந்த ஆண்டு 30 ஆயிரம் இடங்கள் கடைசி வரை நிரம்பவே இல்லை.
இந்த நிலையில் இந்தஆண்டு மேலும் 94 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்கும் சூழல் உள்ளது. எனவே கூடுதலாக 12 ஆயிரம் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications