ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அண்டாவுக்குள் அமர்ந்து உண்ணாவிரதம்
கோவில்பட்டி: கோவில்பட்டி நீர்வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி தண்ணீர் நிரம்பிய அண்டா சட்டியில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கோவில்பட்டி பகுதிகளில் ஓடைகள் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் உள்ளதால் லேசான மழை பெய்தால் கூட மழை நீர் செல்ல வழியின்றி கழிவு நீரும் சேர்ந்து சாலையெங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவு நீர் பொதுமக்கள் மீது வாரி இறைக்கப்படுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே நீர்வரத்து பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அனைத்துலக அனைத்து சாதி, சமய நல்லிணக்க பண்பாட்டு கழகம் மற்றும் ஐந்தாவது துண் அமைப்பு சார்பில் நூதனமான முறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
நகராட்சி அலுவலகம் முன்பு தண்ணீர் நிரம்பிய அண்டா சட்டிகளில் அமர்ந்து அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம், உறுப்பினர்கள் ராஜா, சோலைச்சாமி, முருகன், பிச்சையா ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வராத வருவாய்துறை அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர் ஆகியரை கண்டிக்கும் விதமாக துண்டு பிரச்சுரங்களையும் வினியோகம் செய்தனர். அண்டாவில் தண்ணீரை நிரப்பி அதனை சாக்கடை நீராக பாவித்து உண்ணாவிரதம் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications