நிஸ்ஸான் - பஜாஜ் காருக்கு ரூ 1.1 லட்சமாக விலை நிர்ணயம்!
டெல்லி: பஜாஜ் - நிஸ்ஸான் கூட்டுத் தயாரிப்பாக வரும் மலிவு விலை காருக்கு வெளிச்சந்தை விலை ரூ 1.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது டாடா நிறுவலனத்தின் மக்கள் கார் எனப்படும் நானோவுக்கு நேரடியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
2012-ம் ஆண்டு முதல் நிஸ்ஸான் நிறுவனமும் பஜாஜ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் மலிவு விலைக் கார் விற்பனைக்கு வருகிறது.
இந்தக் காரின் விலை தோராயமாக ரூ 1.35 லட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது இறுதியான விலையை அறிவித்துள்ளார் நிஸ்ஸான் - ரினால்ட் நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோஸ்.
இந்தக் காரின் விலை 2500 டாலர் அதாவது ரூ 1.1 லட்சம் மட்டுமே. இதில் மாற்றமிருக்காது என்று அவர் நேற்று அறிவித்தார். இதனை பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜும் உறுதிப்படுத்தினார்.
தற்போது நானோவின் விலை ரூ.1.23 லட்சம் முதல் 1.72 லட்சமாக (டெல்லியில் எக்ஸ் - ஷோரூம் விலை) உள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் டாடா நானோ விலை உயரும் என்று கூறப்படும் நிலையில், ரூ 1.1 லட்சத்துக்கு நிஸ்ஸான் நிறுவனம் கார் விற்பனை செய்ய முன் வந்துள்ளது. இதனால் டாடா நானோ பெரும் நெருக்கடியைச் சந்திக்க உள்ளது.
நானோவைப் போலல்லாமல், நிஸ்ஸானின் கார் முன்பக்க எஞ்ஜினுடன், அனைத்து நவீன வசதிகளையும் கொண்டதாக தயாராகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications