அனந்தகுமார் பேச்சுக்காக லாலு பிரசாத் யாதவிடம் மன்னிப்பு கேட்டது பாஜக

லோக்சபாவில் நேற்று ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் அனந்த குமாருக்கும், லாலுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
அப்போது லாலு நாட்டை விற்க முயலுகிறார். ஊடுறுவல்காரர்களுடன் இணைந்து செயல்படுகிறார். அவர் ஒரு தேச துரோகி என்று கடுமையாக சாடினார் அனந்தகுமார். இதனால் கடும் கோபமடைந்த லாலு, பதிலுக்கு அனந்தகுமாரை கடுமையாக விமர்சித்தார்.
அனந்தகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் கண்டிப்புடன் கூறியுள்ளன. ஆனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அனந்த குமார் கூறி விட்டார்.
இந்த நிலையில், இன்று லோக்சபாவில் லாலுவிடம் சுஷ்மா சுவராஜ் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இன்று காலை சபை கூடியதும் எழுந்த சுஷ்மா சுவராஜ், உறுப்பினர் அனந்தகுமார் நேற்று கூறிய வார்த்தைகளுக்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது லாலு எழுந்து ஏதோ பேச முயன்றார். இதையடுத்து சிரித்துக் கொண்டே லாலு பிரசாத் சார்பிலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து சுஷ்மா பேசுகையில், அவையில் பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. எனவே இந்தப் பிரச்சினையை இத்துடன் விட்டுவிட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அப்போது அவையில் இருந்த அனந்தகுமார் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications