மலேசியாவில் கைதிகளை விட மோசமாய் நடத்தப்படும் இலங்கை தமிழர்கள்!

எங்களைக் கைதியாக நடத்தாதீர்கள்; அகதிகளாக நடத்துங்கள் என்று மலேஷிய பிரதமருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உதவ வேண்டும் என்றும் வேண்டியுள்ளனர்.
இலங்கையின் வட பகுதியிலுள்ள முகாம்களிலிருந்து 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19 ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டைத் தேடிப் புறப்பட்டனர். அந்தக் கப்பல் மலேசிய கடலில் சென்றபோது மலேசிய போலீசால் கைது செய்யப்பட்டு கைவிலங்கிடப்பட்ட நிலையில் முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனித்தனியாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அங்குள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள முகாமொன்றில் ஆண்களையும், மற்றுமொரு முகாமில் பெண்களையும், வேறு முகாமில் குழந்தைகளையும் தனித் தனியாகப் பிரித்து அடைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மிகச் சிறிய அறையில் கைவிலங்குடன் தவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்குமாறு உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "எங்களுக்கு சுகாதாரமற்ற அறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இவை வதை முகாம்கள் போலவே உள்ளன. எங்களை அகதிகளைப் போன்று நடத்தாமல் கைதிகளைப் போன்றே நடத்துகின்றனர். எங்கள் குழந்தைகளின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை.
தமிழக தல்வர் கருணாநிதியாவது எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களை மீட்கவேண்டும். எங்களுக்கு ஆதரவளித்து தமிழகத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டும். எங்கள் குழந்தைகளை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறி 6 இலங்கைப் பெண்களும் உண்ணாவிரதம் இருந்தனர். அதற்கும் பலனில்லை.
தங்களை அகதிகளாக ஏற்கும் ஏதேனும் ஒரு நாட்டுக்கு அனுப்பிவிடுமாறு இந்த தமிழர்கள் விடுத்த கோரிக்கையையும் மலேசியா நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications