உணவுப் பண வீக்கம் 16.04 சதவிகிதமாக குறைந்தது
Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் 24-ம் தேதியுடன் முடிந்த ஆண்டுக்கான உணவுப் பணவீக்க குறியீட்டெண் 0.57 சதவிகிதம் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 16.61 சதவிகிதமாக இருந்தது உணவுப் பணவீக்கம்.
இந்த அளவு விலை குறையக் காரணம் ராபி பருவத்தின் விளைச்சல் விற்பனைக்கு வந்துள்ளதுதான் என்று நிதித்துறை அறிவித்துள்ளது.
உணவு தானியப் பொருள்களின் விலையில் 0.19 சதவிகிதமும், அரிசி விலை 0.12 சதவிகிதமும் குறைந்துள்ளது.
ஆனாலும் தேயிலையின் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மைதா மற்றும் முட்டை விலை 1 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பருப்பு விலை 0.60 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
காய்கறிகளின் விலை இன்னும் உயர்ந்த நிலையிலேயே உள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் உணவுப் பணவீக்கம் 20 சதவிகிதமாக இருந்தது.












Click it and Unblock the Notifications