கொசுவர்த்தி சுருளால் ராணுவ கூடாரத்தில் தீ-தமிழக கேப்டன் பலி
கபூர்தலா : பஞ்சாப் மாநிலம் கபூர்தலா அருகேஅமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாமின் கூடாரம் தீப்பிடித்து எரிந்ததில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ கேப்டன் உயிரிழந்தார்.
கபூர்தலா அருகே உள்ள பகுபூரியான் என்ற இடத்தில், ராணுவ முகாம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அங்கு என்.ஆனந்த் என்ற கேப்டன், மேஜர் சுதிர் பார்மர் என்ற 2 அதிகாரிகள், கூடாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று கூடாரத்தில் தீப்பிடித்துக் கொண்டது. படிப்படியாக கூடாரம், முழுமையாக எரிந்தது.
இதில் ராணுவ அதிகாரிகள் 2 பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர். உடனே அருகில் இருந்த ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கேப்டன் ஆனந்த உடல் எரிந்து விட்டது. அவரது கருகிய பிணத்தைதான் மீட்டனர். மேஜர் சுதிர் பார்மர் பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனயில் சேர்க்கப்பட்டார்.
கோவையைச் சேர்ந்தவர்..
இறந்து போன ஆனந்த் கோவையை சேர்ந்தவர். அவரது உடல், பரிசோதனைக்காக கபுர்தலா அரசு மருத்துவமனைக்கு+அனுப்பப்பட்டது.
இதுபற்றி ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், கொசுக்கடியில் இருந்த தப்ப கொசுவர்த்தியை பயன்படுத்தி இருக்கிறார்கள். பலத்த காற்று வீசியதால், கொசுவர்த்தியில் இருந்து கூடாரத்துக்கு தீ பரவி, விட்டது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications