'நாம் தமிழர் இயக்கம்' அரசியல் கட்சியாக மாற்றம்-சீமான்
சென்னை: நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார் இயக்குனரும் அதன் தலைவருமான சீமான்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ், இனம், மற்றும் தமிழர்களின் உரிமைகளை காப்பதற்காக நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளோம். மே 18ம் ந்தேதி மதுரையில் இன எழுச்சி அரசியல் மாநாடு மற்றும் கட்சியின் தொடக்க விழா நடக்கிறது.
ஈழத் தமிழர்களின் ஆயுத போராட்டம் கடந்த ஆண்டு மே 18ம் தேதி தான் முடிவுக்கு வந்தது. ஆனால் ஈழத் தமிழர்களின் உரிமை போராட்டம் முடியவில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தான் அன்றைய தினத்தில் கட்சியை தொடங்குகிறோம்.
தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டோம். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. 2016ம் ஆண்டில் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து முடிவெடுப்போம்.
யார் ஜெயிக்க வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி நிர்ணயிக்கும். தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியில் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை விட ஆழமாக வேறூன்றுவோம். கட்சியை வளர்ப்பதற்காக திரைப்படங்களை பயன்படுத்த மாட்டேன் என்றார்.
பேட்டியின் போது பேராசிரியர் தீரன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஆகியோர் உடனிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications