எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தை முற்றுகையிட்டு எய்ட்ஸ் நோயாளிகள் போராட்டம்
சென்னை: 1500க்கும் மேற்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இயங்கி வருகிறது. இன்று இந்த அலுவலகத்தை எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பு சார்ந்த 1500 நோயாளிகள் முற்றுகையிட்டனர்.
அலுவலக காம்பவுண்ட் கேட்டை மூடி வளாகத்திற் குள்படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் வாசலிலும், வரவேற்பு ஹாலிலும் படுத்து கிடந்து கோஷங்களையும், கோரிக்கை அட்டைகளையும் தாங்கி பிடித்திருந்தனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனராக இருந்த விஜயகுமாரை மாற்றக் கூடாது. அவரை மீண்டும் அந்த பணியில் நியமிக்க வேண்டும். எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு 2-வது கட்ட சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு இருந்ததாகவும் தங்களின் சிகிச்சை குறித்தும் மருந்துகள் பற்றியும் அவருக்கு தான் தெரியும்.
எனவே அதிகாரி விஜய குமாரை மீண்டும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
போராட்டம் குறித்து கூட்டமைப்பின் தலைவர் குமார் கூறுகையில்,
தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் 2 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல் மற்றும் 2-ம் கட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2-ம் கட்ட சிகிச்சைக்கு 20 ஆயிரம் பேர் காத்து இருக்கிறார்கள். உயிருக்காக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வெளிநாட்டில் இருந்து மருந்து கொண்டு வர வேண்டும். எங்களை பற்றி முழுமையாக அறிந்தவர் அதிகாரி விஜயகுமார். அதனால் அவரை மீண்டும் இந்த பணியில் நியமிக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications