இந்தோனேசியாவில் பூகம்பம்- தமிழகத்தில் பீதி – சுனாமி எச்சரிக்கை வாபஸ்

முன்னதாக சுனாமி எச்சரிக்கையால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மக்கள் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டதால் பெரும் பீதி நிலவியது.
இந்தோனேசியாவின் அசே மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு 7.2 ரிக்டராக இருந்தது.
30 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்திய நேரப்படி முற்பகல் 11.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் அசே மக்கள் பெரும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
கடும் நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழக கடலோரங்களில் பெரும் பீதி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பெரும் பீதி ஏற்பட்டது.
தலைநகர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோரப் பகுதிகளில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். காவல்துறையினர் ஒலிபெருக்கிகள் மூலம் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர் .மேலும் கடலோரத்தில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான முறையில் இருக்குமாறு எச்சரித்தனர்.
தலைநகர் சென்னையில் மெரீனா கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் போலீஸார் ஒலிபெருக்கி மூலம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறுமாறு கூறினர். இதையடுத்து கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
மேலும் நொச்சிக்குப்பத்தில் உள்ள மீனவர் குப்பத்தையும் போலீஸார் உஷார்படுத்தினர். இதையடுத்து அவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி கடற்கரைச்சாலையில் திரண்டனர்.
கடற்கரைச் சாலையில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த வெளியேற்றம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில்,தற்போது சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்ப்ட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications