அரசு வெளியிட்டுள்ள கட்டண விகிதத்தை ஏற்க தனியார் பள்ளிகள் மறுப்பு
சென்னை: அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணங்களை ஏற்க முடியாது என்று தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க தலைவர் கே.ராஜன் மற்றும் பொதுச் செயலாளர் பி.டி.அரசகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பெரிய கல்வி நிறுவனங்கள் எல்லாம் கல்வி கட்டணத்தை வசூல் செய்து முடித்த பிறகு நடுத்தர மற்றும் சிறிய பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை செய்து கொண்டிருக்கும் வேளையில் தாளாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளின் கல்வித் தரத்திற்கேற்ப கட்டணம் குறித்து ஏற்கனவே தெரிவித்திருந்த கருத்துக்களை பரிசீலிக்காமல் தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்பு வசதிகளை கருத்தில் கொண்டு பள்ளி தாளாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருமித்த கருத்துடன் கூடிய கல்வி கட்டணத்தை நிர்ணயித்தால் மட்டுமே நிர்வாக சிக்கல்களை பள்ளி தாளாளர்கள் தவிர்க்க இயலும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். எனவே அரசால் தன்னிச்சையாக வெளியிடப்பட்டிருக்கும் கல்வி கட்டணங்களை ஏற்க இயலாது.
அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் குறித்த சங்கத்தின் நிலைப்பாட்டையும், தனியார் பள்ளிகளின் தாளாளர்களின் கோரிக்கைகளையும், அரசு நிர்ணயித்த கமிட்டியின் தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தெரிவிக்க இருக்கிறோம்.
எனவே அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் சமச்சீர் கல்வியுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மெட்ரிக் பாடத்திட்டங்களையும் நடத்துவதற்கு அரசு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். பள்ளி வாகனங்களில் சுமார் 25 மாணவர்களை ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications