நாத்தனார் வீட்டில் திருடிய கிறிஸ்தவ போதகர் மனைவி கைது
சுரண்டை: சுரண்டை அருகே உறவினர் வீட்டில் நகை திருடிய கிறிஸ்தவ போதகர் மனைவி கைது செய்யப்பட்டார்.
சுரண்டை அருகே உள்ள கீழசுரண்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சாமுவேல் மனைவி ரஞ்சிதம். பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் வீட்டை பூட்டி சாவியை அங்கேயே வைத்து விட்டு பக்கத்து வீட்டில் பீடி சுற்ற சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போயிருந்தது.
இது குறித்து சுரண்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாய்லெட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ச்சுனன் ஆகியோர் நடத்திய விசாரணையில் ரஞ்சிதம் நகைகளை திருடியது பங்களாசுரண்டையை சேர்ந்த அவரது அண்ணன் ஏசுதாஸ் மனைவி அந்தோணி ரஞ்சிதம் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது நகை திருடியதை ஓப்புக் கொண்டார்.
சுரண்டையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்திருந்த அந்த நகையை போலீசார் மீட்டனர். ரஞ்சிதத்தின் அண்ணன் ஏசுதாஸ் கிறிஸ்தவ போதகர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அந்தோணி ரஞ்சிதம் நாத்தனார் ரஞ்சிதம் வீட்டுக்கு விருந்துக்கு வந்துள்ளார்.
அப்போது ரஞ்சிதம் வீட்டில் இல்லாததால் அந்தோணி ரஞ்சிதம் அங்கிருந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே தங்கியுள்ளார். அப்போதுதான் பீரோவில் இருந்த நகையை எடுத்து கொண்டு நல்ல பிள்ளை போல் மீண்டும் வீட்டை பூட்டி விட்டு சாவியை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு கம்பி நீட்டியுள்ளார்.
அந்த நகையை வங்கியில் அடகு வைத்து அந்த பணத்தை ஆரம்பரமாக செலவழிக்கவே போலீசில் மாட்டிக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications