பணவீக்கத்தைக் கணக்கிட இனி 676 பொருள்களின் விலை கணக்கிடப்படும்
டெல்லி: பணவீக்க விகிதத்தைக் கணக்கிட இனி 676 பொருள்களின் மொத்த விலைகள் கணக்கில் கொள்ளப்படும்.
மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் தற்போது 435 பொருள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன.
இது சரியான நிலவரத்தைக் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனாலேயே, இப்போது உணவுப் பணவீக்கம் என்ற புதிய முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இனி புதிதாக 241 பொருள்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த பணவீக்கம் கணக்கிடப்படும். இதில் எல்.சி.டி. டி.வி.க்கள்,செல்போன்கள்,குடிநீர் பாக்கெட்டுகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இவைதான் இப்போது அதிகம் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதாலேயே இந்த முடிவு.
அதே நேரம் டைப்-ரைட்டர் போன்ற புழக்கத்தில் இல்லாத பழைய பொருள்கள் நீக்கப்பட்டுவிட்டன.
2004-05 ஆம் ஆண்டு இந்த கணக்கிடலுக்கான அடிப்படை ஆண்டாகக் கருதப்படும். வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் அடிப்படை மாதமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.












Click it and Unblock the Notifications