கண்ணிவெடிகளை புதைக்க நக்ஸல்களின் புதிய டெக்னிக்!

மேலும் இந்த வனப் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகளிலும் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அதை எந்த நேரத்திலும் நக்ஸல்களால் வெடிக்கச் செய்ய முடியும் என்றும் அம் மாநில டிஜிபி விஸ்வ ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இந்த வெடிகுண்டுகளைப் பதிக்க சாலைப் பணியாளர்களாக நக்ஸல்கள் வேலைக்கு சேர்ந்து வருவதும் தெரியவந்துள்ளது.
சாலைகள் அமைக்கும் போதே அடியில் வெடிகுண்டுகளை அவர்கள் பதித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளதால் மத்தியப் படைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
இந்த மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்தில் இரு நாட்களுக்கு முன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 8 பேர் கண்ணிவெடியில் சிக்கி பலியாயினர். இந்தச் சாலையை ஆய்வு செய்தபோது புதிதாக தோண்டப்பட்ட பள்ளம் ஏதும் தென்படவில்லை.
எனவே, அந்தப் படையினரின் வாகனம் வேகமாக சென்றுள்ளது. அந்த நேரத்தில் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தார் சாலையில் எப்படி கண்ணிவெடி புதைக்கப்பட்டது என ஆராய்ந்த போது, சாலை போடும் பணியாளர்கள் போல வேலைக்கு சேர்ந்த நக்சலைட்கள் இந்த வெடிகளை புதைத்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை பார்க்கும்போது நக்சலைட்கள் அதிகம் உள்ள நெடுஞ்சாலைகள் முழுவதுமே இதுபோன்ற கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம், என்ற அச்சம் பரவியுள்ளது.
மேலும் இந்த சாலைகளை அமைத்த கான்ட்ராக்டர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கண்ணிவெடிகளை கண்டறியும் கருவிகள் இல்லை:
டிஜிபி விஸ்வ ரஞ்சன் கூறுகையில், நக்ஸல்கள் மிக ஆழமாக புதைத்துள்ள கண்ணிவெடிகளைக் கண்டறிய உதவும் சாதனங்கள் எங்களிடம் இல்லை. அப்படியே இருந்தாலும் வனப் பகுதியில் உள்ள எல்லா சாலைகளையும், வனப் பகுதிகளையும் அங்குலம் அங்குலமாக அலசி கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது நடக்காத காரியம் என்றார்.
சட்டீஸ்கரில் மட்டுமின்றி வேறு மாநிலங்களிலும் நக்ஸலைட்டுகள் இதுபோன்ற கண்ணிவெடிகளை சாலைகளில் பல ஆண்டுகளுககு முன்பே புதைத்திருக்கலாம் என்ற அச்சமும் மத்தியப் படையினரிடையே பரவியுள்ளது.
மத்திய அரசு கவலை:
இந் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. கூறுகையில், நக்சல் பயங்கரவாதம் மிகவும் கவலைக்குரிய அம்சமாக உள்ளது. அது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. நக்சல் பிரச்சனையில் ராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்து பொது சர்ச்சையில் ஈடுபட நான் விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications