மெரினாவில் கூட்டம்-சென்னையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை: கோடை விடுமுறையையொட்டி சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் மிக அதிகமாக வருகை தருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இன்று முதல் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரினா கடற்கரைக்கு மாலை பொழுதை இன்பமாக
கழிக்க கூடுவதால் காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் முதல் கண்ணகி சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்தப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருதியும் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள், தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, கோடை விடுமுறை காலம் முடியும் வரை நடைமுறை செய்யப்படுகிறது.
இந்த போக்குவரத்து மாற்றததின்படி காந்தி சிலையில் இருந்து வட சென்னையை நோக்கி செல்லும் மாநகரப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலை நோக்கி செல்ல அனுமதி கிடையாது.
இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திரும்பி திருவல்லிக்கேணி பாரதி சாலை வழியாக பெல்ஸ் ரோடு சென்று வலதுபுறம் திரும்பி வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை (உழைப்பாளர் சிலை) சென்றடையலாம்.
வட சென்னையிலிருந்து தென் சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் போர் நினைவு சின்னத்திலிருந்து காந்தி சிலைக்கு வழக்கம் போல் செல்லலாம்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெல்ஸ் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.
வாலாஜா சாலையின் ஒரு பகுதி பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து உழைப்பாளர் சிலை வரை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
பாரதி சாலையின் ஒரு பகுதி கண்ணகி சிலையிலிருந்து பெல்ஸ் சாலை சந்திப்பு வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது. பெல்ஸ் ரோடு-பாரதி சாலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை வழியாக கண்ணகி சிலை நோக்கி செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளதது.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications