பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் 20 நாள் 'மெகா ஸ்ட்ரைக்'!
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்கள் 20 நாட்கள் மெகா ஸ்ட்ரைக் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த ஸ்ட்ரைக் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு குறித்து நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் சில வாரங்களுக்கு முன் இருமுறை ஸ்ட்ரைக் நடத்தினர். இதில் பெரும் பாதிப்புக்கு உள்ளானது பிரிட்டிஷ் ஏர்வேஸ்.
முன்பு நடந்த ஸ்ட்ரைக்கில் கலந்து கொண்ட 50க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இதனை கைவிட வேண்டும் என்று கோரியும், நிறுத்தப்பட்டுள்ள பயணச் சலுகை உள்ளிட்ட சம்பள உயர்வுகளை உடனே தரக் கோரியும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ஊழியர்களின் அமைப்பான யுனைட் கோரியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸில் உள்ள 12000 விமான ஊழியர்களில் 90 சதவிகிதத்தினர் இந்த யுனைட்டின் அங்கத்தினர்களே.
20 நாள் ஸ்ட்ரைக்குக்கான தேதிகளையும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
மே 18-22, மே 24-28, மே 30-ஜூன் 3 மற்றும் ஜூன் 5-9 என நான்கு கட்டங்களாக இந்த ஸ்ட்ரைக்கை நடத்த உள்ளனர் ஊழியர்கள்.
ஏற்கெனவே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ். இப்போது இந்த மெகா ஸ்ட்ரைக் நடந்தால், நஷ்டம் தாங்க முடியாத அளவுக்குப் போய்விடும் என்பதால், பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது நிர்வாகம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications