மதுரை அருகே பிரபல விஞ்ஞானியின் மனைவி விபத்தில் பலி
மதுரை: மதுரை அருகே லாரி மீது கார் மோதியதில் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநர் (பொறுப்பு) காசிநாத் பாலாஜி -யின் மனைவி லட்சுமி பலியானார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்தவர் காசிநாத் பாலாஜி (55). இவர் கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநர் பொறுப்பை வகித்து வருகிறார்.
இவர் தனது மனைவி லட்சுமி (53)யுடன் கொடைக்கானலுக்கு காரில் சென்றுள்ளார். காரை ரஹீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கார், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன் கோட்டை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, தூத்துக்குடியிலிருந்து குஜிலியம்பாறைக்கு சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ஓட்டுநர் உட்பட மூவரும் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லட்சுமி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications