தொழிலதிபர் கடத்தப்பட்டு காரோடு எரித்துக் கொலை!
சென்னை: சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு காரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவாயல் மேம்பாலத்தில் நேற்று நள்ளிரவில் ஒரு கார் தீப்பிடித்து எரிந்த நிலையில் நின்று கொண்டிருந்தது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டது.
கீழ்ப்பாக்கத்தில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைத்தன. தீயை அணைத்துவிட்டுப் பார்த்தபோது டிரைவர் சீட்டுக்கு அருகில் கருகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.
கார் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர குமார் சாந்திரியாவின் (48) கார் என்று தெரியவந்தது.
காரி்ல் கைகள் கட்டப்பட்டு எரிந்து கிடந்ததும் அவர் தான் என்று தெரியவந்தது. இவரது வீடு வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் பரித்தாபட் ரோட்டில் உள்ளது.
ராஜேந்திரகுமாருக்கு புதுச்சேரியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது.
நேற்றிரவு புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரை ஓட்டிக் கொண்டு வந்தபோது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அவரை யாரோ காரோடு கடத்தி, கட்டி போட்டுவிட்டு காருக்கு தீ வைத்துள்ளனர். ராஜேந்திர குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், குஷ்பு (18) என்ற மகளும், ரோணத் (14) என்ற மகனும் உள்ளனர்.
பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications