காங்கிரஸ் காலை நக்கும் நாய்கள் முலாயம்-லாலு: பாஜக தலைவர் கட்காரி விமர்சனம்

சண்டீகரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை நாய்கள் என்று விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வந்த வெட்டு தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை குறிப்பிட்டுப் பேசிய அவர், முலாயமும், லல்லு பிரசாத்தும் தங்களை சிங்கம் என்று வர்ணித்து கொள்கிறார்கள். அவர்கள் சிங்கம் அல்ல. சோனியாவின் காலில் விழுந்து அவரது காலையும் காங்கிரசின் காலையும் நக்கி கொண்டிருக்கும் நாய்கள்.
சி.பி.ஐ. பிடியில் சிக்கியுள்ள அவர்கள் அதிலிருந்து தப்பிக்க சோனியாவின் காலில் விழுந்து கிடக்கிறார்கள் என்றார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் லக்னெளவில் உள்ள பாஜக அலுவலகம் மீது சமாஜ்வாடி கட்சியினர் தாக்குதல் நடத்தினர். உபி மற்றும் பிகாரில் கட்காரியின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கட்காரிக்கு இரு தலைவர்களும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவரை கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நிதின்கட் காரி தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் சொல்லிய வார்த்தை முலாயம் சிங்கையும், லாலுவையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.
நான் அவர்களை நாய் என்று சொல்லவில்லை. வழக்கத்தில் உள்ள வார்த்தையைதான் பயன்படுத்தினேன். அதற்கு அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. முலாயமும் லாலுவும் என் மரியாதைக்குரிய தலைவர்கள் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications