வீட்டு அனுமதி வாங்கி கடை கட்டிய கலந்தர் மதீனா கடைக்கு சீல் வைப்பு
சென்னை: வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கி விட்டு பிரமாண்டமான ஜவுளிக் கடையை கட்டிய சென்னை கலந்தர் மதீனா ஜவுளிக் கடைக்கு இன்று சென்னை பெருநகரவளர்ச்சிக் குழும அதிகாரிகள் சீல் வைத்து மூடினர்.
சென்னை தி.நகரில் கலந்தர் மதீனா ஜவுளிக்கடை உள்ளது. திறந்த வேகத்தில் பிரபலமாகி விட்ட இந்த கடைக்கு பெருமளவிலான வாடிக்கையாளர்கள் வந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை இங்கு வந்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் பின்னர் ஜவுளிக்கடை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட இடத்தில் வீடு கட்டுவதற்காகவே அனுமதி வாங்கப்பட்டிருந்தது. ஆனால் வீடு கட்டாமல் பிரமாண்ட ஜவுளிக் கடையை கட்டியுள்ளனர். இதனால்தான் கடை சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வீடு கட்ட அனுமதி வாங்கி விட்டு பிரமாண்ட கடை எழுப்பப்பட்ட விவகாரம் தி.நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications