புனலூர்-கொல்லம் ரயில் போக்குவரத்து - இ.அகமது தொடங்கி வைத்தார்
புனலூர் : புனலூர், கொல்லம் இடையிலான ரயில் போக்குவரத்தை ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது தொடங்கி வைத்தார்.
தமிழக-கேரள எல்லை பகுதியில், செங்கோட்டை-கொல்லம் இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதை 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க இப்பாதையில் 300க்கும் மேற்பட்ட பாலங்கள், குகைகள், உள்ளன.
இப்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றிட 97-98ம் ஆண்டு நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு 2007 மே 1ம் தேதி முதல் கட்டமாக புனலூர்-கொல்லம் இடையே 45.2 கிமீ மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக அமைக்கும் பணி தொடங்கி கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வுகள் முடிந்து அனைத்து பணிகளும் 90 சதவீதம் முடிவடைந்ததை தொடர்ந்து கொல்லத்தில் வைத்து புதிய தடத்தில் புதிய ரயிலை ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் கேரள எதிர்கட்சி தலைவர் உம்மன் சண்டி, எம்பிக்கள் எம்எம் பேபி, குருதாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது பேசும்போது இன்னும் ஓரிரு மாதங்களில் செங்கோட்டை -புனலூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications