பெரியாறு அணையை உடைக்க 12,000 கிலோ வெடிமருந்தை தயார் செய்துள்ளது கேரளா- வைகோ

தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக போராட பொதுமக்களை திரட்டும் பணியில் நெல்லை மாவட்டத்தில் நேற்று மதிமுக பொது செயலாளர் வைகோ கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மானுரில் நடந்த பொதுகூட்டத்தில் அவர் பேசுகையில்,
முல்லை பெரியாறு பிரச்சனைக்காக நாம் சில ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். அதற்கான நதிகளை தேசியமயமாக்க கோரி நான் 1200 கிமீ நடை பயணம் மேற்கொள்வேன். 2006ம் ஆண்டிலேயே முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனால் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் கேரள அரசு சட்டசபையை கூட்டி அணை தங்களுக்குதான் உரிமையுள்ளதாக கூறி வருகிறது.
முல்லை பெரியாறு அணையின் அடிமட்ட அகலம் தற்போது 200 அடியாகவும், 6 அங்குலமாகவும் உள்ளது. அந்த அணையில் கலுங்கு, மதகுகள் இல்லை. 19ம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய பஞ்சத்தை போக்க இந்த அணையை பொன்னி குயிக் கட்டினார். பெருமைமிக்க அந்த அணையை தற்போது உடைக்க கேரள அரசு முயற்சி செய்து வருகிறது.
இதற்காக 12 ஆயிரம் கிலோ வெடி மருந்தை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தை சேர்ந்த 89 ஆயிரம் ஏக்கர் இரு போக விளைநிலங்கள் பாதிக்கப்படும். முல்லை பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழகத்தை சேர்ந்த 5 மாவட்டங்கள் அழிந்து போகும். எனவே நம்முடைய எதிர்ப்பை நாம் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே வரும் மே 28ம் தேதி தண்ணீருக்காக தர்ம யுத்தம் மேற்கொள்ள உள்ளோம். முல்லை பெரியாறு மட்டுமின்றி நெய்யாறு, இடதுகரை சானல் என நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரள அரசை கண்டித்து சாலை மறியல் நடத்த உள்ளோம்.
இப்போராட்டம் செங்கோட்டை, களியாக்கவிளை உள்ளிட்ட 13 தமிழக-கேரள எல்லையோர சாலைகளில் நடக்கும். நெல்லை மாவட்ட மக்கள் செங்கோட்டையில் நடக்கும் சாலை மறியலில் கலந்து கொள்ள வேண்டும் என்றார் வைகோ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications